2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளத்தின் பின் அம்பாறையில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களிலுள்ள குடியிருப்புக்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்திலுள்ள வீடுகள், வீட்டுச் சுற்றுப்புறங்களிலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறும் அதேவேளை, வெள்ளத்தினால் பாம்புகள் குடியிருந்த புற்று போன்ற இடங்கள் அழிந்துள்ளதானாலேயே இவ்வாறாக வளமைக்கு மாறான முறையில் வீடுகளுக்குள்ளும் வாகனங்களின் இடுக்குகளுக்குள்ளும் பாம்புகள் நடமாடுகின்றன என இப்பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் சம்மாந்துறை பிரதேசத்தைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது இல்லத்தில் வைத்து பாம்பு தீண்டியதனால் ஆபத்தான நிலைமையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--