2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடுவோர்க்கான நேர்முக தேர்வு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நேர்முகப் பரீட்சையில் பலர் கலந்து கொண்டனர். இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் இள வயதுடையோராவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகமான இடங்களில் அதன் மரச் சின்னத்திலும், சில இடங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியோடு இணைந்து வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .