2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநாகர சபையின் தனியார் பஸ் தரிப்பிடம் சேதமடைந்துள்ளதால் மக்கள் விசனம்

Kogilavani   / 2011 ஜனவரி 24 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபையின் தனியார் பஸ் தரிப்பிடமானது சேதமடைந்துள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையத்தின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை  உடைந்து விழுந்ததில் பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

தரிப்பிடத்தின் ஏனைய பகுதிகளும் உடைந்து விழும் நிலையில் இருப்பதுக் குறித்து பயணிகளும்,  பஸ் நடத்துனர்கள் அப்பகுதி கடை உரிமையாளர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் தரிப்பிடத்தை திருத்தி தருமாறு மாநகர சபையைக் கோரியும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது மனவேதனையை அளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர பிரதிமேயர் ஏ.எ.பஸீரிடம் கேட்டபோது,  தங்களுக்கு இந்த பயணிகள்  தரிப்பிடம் உடைந்து விழுந்த விடயம் இப்போதுதான் தெரியவந்தது. விரைவில் இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--