2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆண் பிள்ளைகள் சேர்ப்பு

Super User   / 2011 ஜனவரி 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

இவ்வருடம் முதலாம் தரத்துக்கு ஆண் பிள்ளைகளை சேர்க்க அனுமதி மறுத்து வந்த சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய நிர்வாகம், இன்று காலை ஆண் பிள்ளைகளுக்கான அனுமதியினை வழங்கியது.

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட குறித்த பாடசாலையின் பெயரில் மகளிர் எனும் பதம் அடங்கியுள்ள போதும் இது ஆண், பெண் பிள்ளைகள் இணைந்து கற்கும் ஒரு கலவன் பாடசாலையாகும்.

இப்பாடசாலையினை பெண்கள் பாடசாலையாக்கும் திட்டத்தின் கீழ் இவ்வருடம் முதல் ஆண் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என மேற்படி பாடசாலை நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது ஆண் பிள்ளைகளை குறித்த பாடசாலையின் முதலாம் தரத்தில் அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி, கடந்த கடந்த வாரம் அப்பகுதி பெற்றோர்கள் ஆர்ப்பாட்மொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலைமையினையடுத்தே பாடசாலை நிர்வாகத்தினர் தமது தீர்மானத்திலிருந்து விலகி, ஆண் பிள்ளைகளை இவ்வருடம் தமது பாடசாலையில் அனுமதித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--