2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதுடன் போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு - அம்பாறை, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதிகளில் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானது இந்த பிரதேசங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவதாக அன்மையில் கல்முனையில் பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பிரதேச பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மேலும் அண்மையில் நடந்த விபத்துக்களில் மாடுகளும், கனரக வாகனங்களினால் அடிபட்டு இறந்த விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக மாநகரசபைகள், பிரதேசசபைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியும், இவைகளுக்கான சட்ட நடைமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • mi aaseek Monday, 21 February 2011 06:11 PM

    கட்டாகாலி மாடுகளின் தொல்லை தீரவும் இல்லை. விபத்துக்கள் குறையவும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .