2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏ.ஐ. இற்கு எதிராக யூடியூப் எடுத்த நடவடிக்கை

Freelancer   / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலித் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமானவை என நம்ப வைத்த 2 பாரிய யூடியூப் தளங்களை யூடியூப் நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது. 
 
இந்தியாவைத் தளமாகக் கொண்ட 'ஸ்கிரீன் கல்ச்சர்' (Screen Culture) மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'கே.எச் ஸ்டுடியோ' (KH Studio) ஆகிய 2 யூடியூப் தளங்களுமே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

குறித்த 2 யூடியூப் தளங்களும் இணைந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் கொண்டிருந்தன. 
 
இந்த யூடியூப் தளங்கள் ஏற்கனவே வெளிவந்த திரைப்படங்களின் காட்சிகளுடன், ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி காட்சிகளை இணைத்து புதிய திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் போல வெளியிட்டன. 
 
இதனைப் பார்த்த பல ரசிகர்கள், இவை ஹொலிவுட் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள் என நம்பி ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X