2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் முற்றுகை

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் இரண்டை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான சாதனங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அம்பாறை விசேட பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசேதகர் சோப சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இரவு 10 மணிக்கு அக்கரைப்பற்று பழைய பொலிஸ் நிலைய
வீதி மற்றும் தம்பிலுவில் வில்லியம்பிள்ளை வீதி ஆகியவற்றில் இயங்கி வந்த இரு சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களை பொலிஸாரால' முற்றுகையிடப்பட்டனவாகும்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

 • Dr. Javahir Sunday, 20 February 2011 03:45 PM

  'மீட்கப்பட்டது' என்பது தவறான மொழிப்பிரயோகமாகும். தன்னால் பறிகொடுக்கப்பட்டத்தை திரும்பப்பெறுவதே 'மீட்டெடுத்தல்' ஆகும். தயவு செய்து மொழியை உணர்ந்து பயன்படுத்துங்கள்.

  Reply : 0       0

  Sekar_Bates Sunday, 20 February 2011 10:18 PM

  இந்த செய்தியில் மீட்டெடுத்தல் என்பதற்கு பதிலாக கண்டெடுக்கப்பட்டது, அல்லது கைப்பற்றப்பட்டது என குறிப்பிட்டிருக்கலாம். தவறுகளை சுட்டிக் காட்டும் பொழுது, சரியான மொழிப் பிரயோகத்தையும் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. நன்றி.

  Reply : 0       0

  potunalam virumpi Monday, 21 February 2011 05:57 AM

  இவங்கட டாச்சர் சும்மாவே தாங்க முடியல்ல... டிவி இலுமா?

  Reply : 0       0

  Dr akeel Tuesday, 22 February 2011 03:52 AM

  விடயம் புரிதல் முக்கியம். எழுதும் நபர் demotivate பண்ணாதிங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .