2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தேசிய காங்கிரஸ் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உள்ளூராட்சி மாகாண சபைகளுக்கான தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சி மாறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டடியலில் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு போட்டியிட்ட  எம்.ஐ.எம். முபீஸ் நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

ஏற்கனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிட்ட எம்.ஏ. வதுர்சமான் தேசிய காங்கிரஸில் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர் யூ.எல். சுபைதீன் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

இதேவேளை, முல்லைத்தீவு பண்டியன் குளம் பிரதேச சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி சார்பாக பஸ் சின்னத்தில்,  முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஞானசீலன் ரொபின் உட்பட இருவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .