2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

“எனக்கு தடை விதிப்பவர்களிடம் கேளுங்கள்”

Editorial   / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநில கூர்க் அழகியான ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் புகழ் பெற்றவர். சுல்தான், வாரிசு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 'கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் என்னை உருவாக்கியது தெலுங்கு திரையுலகம்தான்' என பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் கன்னட படங்களில் அவரை நடிக்க வைக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோட கூர்க் பழங்குடி இனத்திலிருந்து நடிக்க வந்த முதல் நடிகை நான்தான் என்றும் ஒரு பேட்டியில் கூற அதுவும் சர்ச்சையாகி, உங்களுக்கு முன்பே நிறைய பேர் சாதித்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு தகவல்களை வெளியிட்டனர்.

இந்த பிரச்சினைகளை தொடர்ந்து அவர் கன்னட படத்தில் நடிப்பதுமில்லை, நடிக்க யாரும் அழைப்பதுமில்லை. இதுகுறித்து ராஷ்மிகா மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் "தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனால் தனிப்பட்ட அவதூறுகள் தவறு. நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதை சொன்னால் அதைக் கருத்தில் கொண்டு வேலை செய்வோம். யார் எனக்கு தடை விதிக்கிறார்களோ அவர்களிடம் சென்று ஏன் அவருக்கு தடை விதிக்கிறீர்கள், அவர் என்ன தவறு செய்தார் என்று கேளுங்கள்''.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .