2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அம்பாறை வீதிகளை துரிதகதியில் அபிவிருத்திக்கு உட்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

அம்பாறை மாவட்டத்திலுள்ள முக்கிய பிரதேசங்களில் பல வீதிகள் துரித கதியில் காபட் வீதிகளாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபஷ்சவை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய மேற்படி காபட் வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்திற்கு நாளை சனிக்கிழமை விஜயம் செய்யும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, காபட்வீதி நிர்மாணம் குறித்து ஹரீஸ் எம்.பி.யுடன் கலந்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்பு அம்பாறை கச்சேரியில் இடம்பெறவுள்ளது. அத்துடன் வீதி நிர்மாணிக்கப்படவுள்ள இடங்களையும் நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .