2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தாயின் கண்முன்னே விபத்து: மாணவன் வைத்தியசாலையில்!

Lenin Raj   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு – அவிசாவளை ஹைலெவல் வீதியில் விறகுகளை ஏற்றிச் சென்ற லொறியிலிருந்து மரக்கட்டைகள் சரிந்து வீழ்ந்ததில், பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னான சிறி சுமனஜோதி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த மாணவன் தனது தாயுடன் வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

குருணாகல் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி விறகுகளைப் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற லொறியிலிருந்தே, திடீரென விறகுகள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளன. விபத்து நடந்த உடனேயே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காகப் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .