2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அழுத்தம் கொடுத்த சீனா; ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

S.Renuka   / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்காவின் உச்சகட்டத் தாக்குதலுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தயாராகி வந்த நிலையில், ஈரான் நிர்வாகத்துடன் தாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக இரு சீன உயரதிகாரிகள் ஏ.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். 

அதாவது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய கிழக்கில் நடைபெற்று வந்த ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர், தற்போது 02 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் முன் வைத்துள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறப்படுகிறது. 

இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தத்திற்கு சீனா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதாவது, ஈரான் மீது உச்சகட்டத் தாக்குதலுக்கு ட்ரம்ப் தயாராகி வந்த நிலையில், ஈரான் நிர்வாகத்துடன் தாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக இரு சீனா தெரிவித்துள்ளது. 

ஹார்முஸ் நீரிணையை படைபலம் கொண்டு வலுக்கட்டாயமாக திறக்கவழி செய்யும் ஐ.நா. தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு ஈரானுக்கு சீனா அழுத்தம் கொடுத்ததாக தானும் அறிந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பு ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் மூலமாகவும் சீனா சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானும் சீனாவும் நெடுங்காலமாகவே ஆழமான நட்புகொண்ட நாடுகள். சீனா தனக்கு தேவையான கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதியை ஈரானில் இருந்துதான் வாங்குகிறது. 

ஈரானில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் சீனா பெரிய அளவில் உதவியுள்ளது. அதேபோன்று, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை ஈரான் சமாளிக்க சீனா மிகப்பெரிய அளவில் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .