2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் கல்வீச்சு

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மற்றொரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது  முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

அமைச்சர் ஒருவரினதும் மாகாண அமைச்சர் ஒருவரினதும் அவர்களின் குண்டர்களினதும் எதிர்ப்புக் மத்தியிலும் மிகவும் வெற்றிகரமாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றதாகவும் ஸ்ரீ ல.மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரவூப்  ஹக்கீம் காரசாரமாக உரையாற்றியதாகவும் ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையிலிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகமும் குண்டர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடமும பொலிஸ் மா அதிபரிடமும் தாம் முறையிடப் போவதாகவும் இவ்வாறான கீழ்த்தரமான சம்பவங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸுக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை தடுத்து விட முடியாது எனவும் கட்சியின் தலைவரும் நீதியமைச்சர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்துள்ளார். Pix: Haneek Ahamad


  Comments - 0

 • atham kaaka Saturday, 05 March 2011 06:59 PM

  அக்கரபத்து ஒரு கொதறத்தான ஊருதான்....
  ஓம் மக்காள் நேத்து பின்னேரம் நம்முட மருகசு பள்ளிக்கு பக்கத்துல
  மரக்காராக்களுட பப்புலிக்கு மீட்டிங் செற்பண்ணி இருந்தாங்க...
  மரக்காராக்களுட தலைவன் வாரெண்டும் கத.....அப்புடித்தான்
  தலைவனும் வந்தான்....அதுக்குப்பொறகுதான்
  அந்த கொதறத்து நடந்தது...

  நெடுநாளா மரக்காராக்கள்ல தலைவனுக்கும்...
  அக்கரபத்துக்கும் ஒத்துக்கறல்ல. மரத்தலைவன் கடந்த வருடங்களுல
  பலமொறய் தனகிப்பாத்துருக்கான்...சீண்டிப்பாத்திருக்கான்
  ஒண்டுக்கும் ஏலாமதான் பெய்த்து...
  அக்கரபத்து மக்கள் மரத்தலைவன்ட ஒறவ கரண்டிக்கு கீழதான்
  வெச்சிருந்தாங்க...ஊருக்கு வெளிய தள்ளி வெச்சிருந்தாங்க....

  இப்ப என்னெண்டா அவரு நீதி நெயாய அமச்சராம் எண்டுப்பட்டு
  பெரிய கெப்பர். ஓம் புள்ளயாள் கெப்பர் புடிச்சி தலைக் கேறினதால
  பெரிய சண்டியண்ட நெனப்புல வீர தீர வசனங்களோட அக்கரபத்துக்கு
  வந்தா...மக்கள் உடுவாங்கயா...


  கண்ணதாசன்ட ''மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்க அவ்வை சொன்னது.அவ்வை சொன்னது அதில் அர்த்தமுள்ளது'' எண்ட பாட்டாவது தெரியாதா....

  கருத்துச் சொதந்திரம் உரிம...எண்டெல்லாம் கதய்ப்பினம்....
  ஆரும் வந்து அவங்குட கருத்த செல்லுறதுக்கு உடனும். அதுதான் கருத்துச் சொதந்திரம் எண்டெல்லாம்
  கனக்க அறப்படிச்ச கத கதய்க்காங்க....

  அவங்களுக்கு ஒண்டு செல்லறன் இந்த ஆதம்காக்கா..
  மக்கள் தங்குட எதிர்ப்ப தெரிவிக்கிறதும்.... சொதந்திரம்தான்..
  அது போல தங்குட கருத்துக் கெதிரான கருத்தக்களை
  வெரட்டி அடிக்கிறதும்...சொதந்திரம்தான்.
  தங்குட கருத்தக்காக போராடுறதும் சொதந்திரம்தான்....

  கருத்தச் செல்லுறாப்போல...கருத்த எதிக்கும் சொதந்திரமும்
  ஜனநாயகமானதுதான்....
  ஒலகத்துல இண்டெய்க்கு நடக்கற பொரட்சிகள் பாருங்கோ தெரியும்.

  இம்பட்டு நாளும் அக்கரபத்துல நடந்த மரக்காராக்களுட கூட்டத்த
  ஆரும் ஒண்டும் செய்யல...அவியிர பாட்டுலதான் உட்டுப்போட்டு
  மக்கள் இருந்தாங்க...
  நேத்து மட்டும் ஏன் உடல எண்டு ரொசிக்கனும்...
  மரமேறிகளின் தலைவனுக்கும் அக்கரபத்து மக்களுக்கும் ஒத்துக்கறறெல்ல
  எங்குறததான் அந்த வெசயம்...
  இத எல்லாரும் நல்லா வெளங்கணும்.
  மரமேறிகளின் தலைவன் வெராத எந்தக்கூட்டத்துக்கும்
  நாங்க எதிர்ப்பு செய்யமாட்டோம்...

  அந்த எதிர்ப்ப செஞ்ச வழிமொறய மனம் ஒத்துக்கல..
  அது பொளயான வழிமொற...
  பள்ளிட பீக்கருல.. தூசணமெல்லாம் பேசினது...
  பள்ளிக்க பல கோலங்கள்ல ஆக்கள் பூந்து நிண்டு
  கத்திக் கூவெண்டது...
  பள்ளிய பயன்படுத்தினத ஒத்தக்கல....
  அது வெக்கமான ஒரு சம்பவம்.
  அமச்சரு குட்டி அமச்சரு
  வேட்பாளர்கள் என எல்லாரும் நிண்டு இதச் செஞ்சது
  பொள எண்டுதான் செல்லனும்...
  இனி இப்புடி எதுக்கப்போடாது...
  அதக்கு வேற வழிமொறயக் கய்யாலனும்
  எங்குரது ஆதம் காக்காட கடும் கோவமான செய்தியாகும்.

  Reply : 0       0

  Amjath Saturday, 05 March 2011 11:02 PM

  சொந்த பெயரை போட வக்கில்லாத வாலாட்டிகள் பெரிய கெப்பர் கத எழுதிரிங்களே!
  இவ்வளவு காலமும் வரமுடியாம இருந்தவர் நீதி அமைச்சர் எண்ட கெப்பர்ல கூட்டமே நடத்திப்போட்டு போய் இருக்காரே !

  இனி உங்களுக்கெல்லாம் ஆப்புடியோய் ....!!!!

  Reply : 0       0

  Sitheek Sunday, 06 March 2011 05:26 AM

  நல்ல சொன்னிங்க !

  Reply : 0       0

  Hassan Basit Sunday, 06 March 2011 04:46 PM

  ஊரில இருக்கிற சிலருக்கு அல்லது பலருக்கு மரத் தலைவன் புடிக்கல்ல என்பதுக்கு ஊருக்கே வரப்படாதுஇ ஊரிலே மீட்டிங் வெக்கப்போடாது என்குறது ஆதங்காக்காக்கு செரியா இருக்கலாம். அப்புடிப்பத்தாஇ எல்லாத்தையும் குதிரையிலேயே செஞ்சு கொண்டிருக்கிற (பரீட்சை தொடக்கம் எலக்சன் வரை) கஅமைச்சர மத்த எந்த ஊருக்கு புடிக்குமாம்? அப்புடி எண்டா அவரு அக்கரப்பத்த தவிர வேற எங்கயாவது மீட்டிங் வெக்கலாமாமா? ஆதம்காக்காக்கிட்ட கொஞ்சம் கேட்டுச் செல்லுவீங்களா?

  Reply : 0       0

  Ratnam Ganesh Sunday, 06 March 2011 04:53 PM

  'தனக்கு எதிர்ப்பான கருத்த வெரட்டி அடிக்கறது' சுதந்திரமா? ஆதம் காக்கா நெதானத்திலதான் கதக்காரா? நாடு ரொம்ப கெட்டுப்போச்சு..

  Reply : 0       0

  Ameer Monday, 07 March 2011 09:42 PM

  அதா போன்றோருக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

  Reply : 0       0

  Zaadhir Sunday, 27 March 2011 10:43 PM

  Hey boys, You just talked something unusual... If Others liked him (Tree) Y he couldn't have more seats there in AKP? ha?....
  No one Likes him but people who against athaullah for the personal reasons, likes him (Tree) to get in to AKP for let atha's head down. So Other people dont let their leader's head goes down, even You people never let your leader's head down in your area... Thats what happened there in AKP right,,, then be cool and calm down...

  Reply : 0       0

  mahaan Saturday, 05 March 2011 03:16 PM

  மக்களை புறக்கணிப்பவர்கள் கல்லை மட்டுமல்ல அவமானத்தையும் எதிர்பார்க்கத்தான் வேண்டும் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--