Super User / 2011 மார்ச் 05 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனியுடைய வாகனத்தின் மீது இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் வானம் சேதமடைந்துள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கூட்டமொன்றில் கலந்துவிட்டு, தனது வீடு நோக்கி குறித்த வேட்பாளர் சென்று கொண்டிருந்தபோது, மறைந்து நின்ற ஒரு கும்பல் அவரின் வாகனத்தின் மீது கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தாக்குதலில், வாகனத்தின் முன் பக்கக் கண்ணாடி சேதமடைந்துள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் காயமின்றித் தப்பியுள்ளனர்.
அக்கரைப்பற்றுப் பிரதேசமானது அமைச்சர் அதாவுல்லாவின் சொந்த ஊர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
6 minute ago
14 minute ago
17 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
17 minute ago
19 minute ago