2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வாரம் மின்சார வெட்டு

Super User   / 2011 ஜூன் 15 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை உப மின் நிலையத்தில் திருத்தவேலை காரணமாக எதிர்வரும் 18, 19, 20, 21, 22, 23, 24ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எட்டு மணி நேர மின்சாரத் தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி 18ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை நகர், கல்மடுவ, ஹிங்குரான, தமன, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ, கொண்டுவட்டுவான், இங்கினியாகல, உகன, மகாஓயா, பதியத்தலாவ, வீரகொட, மத்தியமுகாம்,  கல்முனை மின் பொறியிலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 8மணி முதல்  மாலை 4.30 மணி வரை மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை நகர், கொண்டுவட்டுவான், பறாகாகல, ஹிமிதுருராவ, நாமல்ஓயா மற்றும் இங்கினியாகல ஆகிய பிரதேசங்களிலும்,

20ஆம் திகதி திங்கட்கிழமை உகன, கொணாகொல்ல, பியங்கலை, தம்பிட்டிய, மகாஓயா, சேரங்கட மற்றும் பதியத்தலாவ ஆகிய பிரதேசங்களிலும்,

21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 5, 11, 17, 21ஆம் கொலனிகள் நவகம்கொட ஆகிய பிரதேசங்களிலும்,

22ஆம் திகதி புதன்கிழமை கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, சவளக்கடை, நற்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, 15ஆம்கொலனி, சேனைக்குடியிருப்பு, மீராச்சோலை, துறைநீலாவணை மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசங்களிலும்,

23ஆம் திகதி வியாழக்கிழமை அட்டாளைச்சேனை, அட்டாப்பள்ளம், ஒலுவில், பாலமுனை மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களிலும்,
24ஆம் திகதி வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று, கல்மடுவ, ஹிங்குராண, தமன, திருக்கோயில், இறக்காமம், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ, தெம்பக்காவெல மற்றும் பன்னல்கம ஆகிய பிரதேசங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .