2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் இடமாற்றம் குறித்து ஜனாதிபதியிடம் எதிர்ப்பு தெரிவிக்க கிழக்கு மாகாண அரச எம்.பிக்கள் தீர்மான

Super User   / 2011 ஜூன் 19 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை திங்கட்கிழமை இரவு நடைபெறவுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய  கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்கான எதிர்ப்பினை கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவுள்ளனர்.

பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ள இந்த இடமாற்றத்தை உனடியாக இடைநிறுத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தானும் ஏனைய கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் - தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற அரசதரப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஆகியோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இடம்பெறும் சர்ச்சைக்குரிய  கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணையொன்று எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • koneswaransaro Monday, 20 June 2011 05:42 PM

    ஆசிரியர் இடமாற்றங்கள் வருட முற்பகுதியில்தான் செய்யப்படவேண்டும். இடைக் காலத்தில் செய்வது பிள்ளைகளின் படிப்புக்குத்தான் கேடாய் முடியும். கிழக்கு மாகாணக் கல்வித் துறைக்கு வரும் அதிகாரிகள் நித்திரை தூங்கிகளாக இருப்பது மக்கள் செய்த பாவமோ என்னவோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .