Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் உள்ள இரும்பகம் ஒன்றில் தகர அட்டியை நகர்த்த முற்பட்டபோது தகரம் வெட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா தனஸ்குமார் (வயது 36) என்பவராவார்.
கடந்த 14 ஆம் திகதி தகர அட்டியை நகர்த்த முயன்ற போது தகரம் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025