2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் யுவதியொருவரை கடத்தும் முயற்சி: சந்தேகநபர்கள் அறுவர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனையில் யுவதியொருவரை கடத்துவதான முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களுள் அறுவரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை யுவதியொருவரை கடத்த முற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இவர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இது ஒரு காதல் தொடர்பான பிரச்சினை எனவும் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .