2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர சபை தேர்தல்; நிசாம் காரியப்பரின் விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர எல்லைக்குள் உட்கட்டமைப்பு அபிவித்தி, பொதுச்சுகாதரம், அனர்த முகாமைத்துவம், பொருளாதர அபிவிருத்தி, இனங்களுக்கிடையிலான நல்லுறவு போன்ற 10 முக்கிய அம்சங்கள் இந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற விஞ்ஞாபன வெளியிட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. ஜவாட் எம்.ஏ.அப்துல் மஜீட். ஏ.எம்.ஜெமீல், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நசீர் மற்றும் கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர சபை தேர்தல் வரலாற்றில் வேட்பாளரொருவர் விஞ்ஞாபனம் வெளியிட்டமை இதுவே முதற் தடவையாகும்.


  Comments - 0

 • oruvan Monday, 19 September 2011 01:26 AM

  நல்ல திட்டங்களும் உளத் தூய்மையும் இன்ஷா அல்லாஹ் வெற்றியைத் தரும்.

  Reply : 0       0

  SAMEER M SAHIB Monday, 19 September 2011 01:51 AM

  THERE IS A BIG CHALLANGE FOR MUSLIMS IN KALMUNAI.
  I THINK HE IS THE BEST CHOICE FOR KALMUNAI MUNUSIPAL COUNCIL WHICH IS NEGLEGTED WITHOUT ANY DEVELOPMENT FOR A LONG TIME AFTER THE DEMISE OF OUR GREAT LEADER MARHOOM MHM ASHRAFF.

  Reply : 0       0

  rozan Monday, 19 September 2011 04:21 AM

  இவரு தலைவருக்கு ஏப்படி நேரடி வாரிசு....??? அது இருக்க...நேற்று திரு. ஹலீம் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளி இட்டு இருக்கிறார்....இதைவிட அதிகம் சனக்கூட்டம் வந்திருந்தது........

  Reply : 0       0

  rozan Monday, 19 September 2011 04:27 AM

  ஹரிஸ் மக்களோடு ஒன்றித்து வாழ்பவர்..... தலைக்கனம் அற்ற சட்டத்தரணி....சாதாரண மக்களோடு சமமாக வாழும் செல்வந்தர்......

  Reply : 0       0

  SLMC Monday, 19 September 2011 05:02 AM

  ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு ஆளையாள் வெட்டுவதை முதலில் நிறுத்துங்கள்.

  Reply : 0       0

  அஹமட் Monday, 19 September 2011 05:44 AM

  வாழ்த்துக்கள் நிசாம் காரியப்பர் அவர்களே
  உங்களின் விழாவுக்கு எங்கட தவிசாளர் நசீர் அவர்களைம் ச்மூக சேவையாளரும் இளம் அரசியல்வாதியுமான பி.சபை உறுப்பினர் முனாஸ் மற்றும் எல்லா ஊர்களில் இருந்தும் எல்லாரையும் அழைத்து இருப்பது சந்தோசம் நீங்கள் இப்படி எல்லாரையும் அனுசரித்து போனால் நிச்சயம் வெற்றிதான்.

  Reply : 0       0

  rozan Monday, 19 September 2011 08:13 AM

  ப்ளேன் டி தான் கிடைத்திருக்கும்.....அஹமத்.....

  Reply : 0       0

  rozan Monday, 19 September 2011 09:28 AM

  இன்று ஹரீஸ் உடைய பொதுக்கூட்டத்துக்கு அமோக மக்கள் கூட்டம்... அனைத்து வேட்பாளரும் வருகை...

  Reply : 0       0

  riro Monday, 19 September 2011 11:56 AM

  இதற்கு சில நாட்களுக்கு முன்னால் மருதமுனையில் ஒரு விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதை விட்டுடீங்களே சார்........

  Reply : 0       0

  pasha Monday, 19 September 2011 02:49 PM

  சாய்ந்தமருது மக்களே சிந்தியுங்கள் உங்கள் வாக்கை பெற்று அவர்கள் மேயர் மற்றும் எம் பீ ஆவார்கள். நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு வாக்கு அளிக்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு எதுவும் இல்லை.

  Reply : 0       0

  Ameer MY Monday, 19 September 2011 03:07 PM

  நிசாம் காரியப்பர் போன்ற சிறந்த அறிவாளிகள் நமது கல்முனை மாநகர சபைக்கு மேயராக வருவது கல்முனை மாநகருக்கும் அந்த ஆசனத்துக்கும் ஏன் முஸ்லிம் காங்கிரசுக்கும் பெருமை ................ வாழ்த்துக்கள் நிசாம்
  கல்முனை மக்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகட்டும் .............

  Reply : 0       0

  m.a.m.Riyal Monday, 19 September 2011 03:56 PM

  அல்லாஹு உங்களுக்கு உயர்ந்த வெற்றியை தருவானாக. அல்ஹம்துலில்லாஹ்...

  Reply : 0       0

  Hathee Monday, 19 September 2011 05:41 PM

  நல்ல ஆரம்பம். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Hathee Monday, 19 September 2011 06:03 PM

  தேர்தலில் அதிக வாக்குகள் எடுப்பவர்தான் மேயர் என்று கட்சி சொல்லிருக்கும் போது ஏன் ஊர் வாதம் பேச வேண்டும். தேர்தலில் அதிகம் வக்கைப்பெற முயற்சி செய்யுங்கள். மக்களை குழப்பாதீர்கள்
  ப்ளீஸ்.

  Reply : 0       0

  RISAN Monday, 19 September 2011 08:05 PM

  யாருக்கு அதிக வாக்கு உள்ளதோ அவருதான் மேயர்.

  Reply : 0       0

  Uroonan Monday, 19 September 2011 09:56 PM

  ரொம்ம்ப நன்றாக அலசினேன் இ ஓரிருவர் தான் சிறந்த தெரிவு இ அதிலும் ஹலீம் தான் மிகவும் சிறந்த தெரிவாக படுகுது.

  Reply : 0       0

  bis Monday, 19 September 2011 09:59 PM

  விரால் இல்லாக் குளத்துக்கு செப்பலி தலைவராம்! இப்போ விராலில்ல கொடுவாவே வந்துள்ளது, தம்பிக்கு சிக்கல் தான்!

  Reply : 0       0

  rozan Monday, 19 September 2011 11:44 PM

  ரியால் & ஹாதீ......பகல் கனவு காணவேண்டாம்.......அமீர்...உங்கட கருத்து பல கல்விமான்களை கொண்ட கல்முனை இணை அவமானப்படுத்துது ...நீங்க மரியாதையாய் வாபஸ் பேரனும்.....மிஸ்டர். பிஸ் நீங்க யார "கொடுவா" ஏன்று சொல்றீங்க....?

  Reply : 0       0

  jaleel kwt Sunday, 18 September 2011 01:21 AM

  வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ......

  Reply : 0       0

  sadath Sunday, 18 September 2011 01:22 AM

  வாழ்த்துக்கள்! செயலில் காட்ட வேண்டும்.

  Reply : 0       0

  Atham Bawa Ameen Sunday, 18 September 2011 03:22 AM

  அப்படா இப்போதாவது புத்தி வந்ததே. காலம் தவறிய அரசியல் பிரவேசம். பார்க்கலாம் மக்களின் தீர்ப்பினை. எது எப்படியோ வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள். தலைவரின் நேரடி வாரிசு நீங்கள் தான் என்பதை நாங்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. வளர்க உங்கள் வெற்றிப் பயணம்.

  Reply : 0       0

  Meera Mohideen Tuesday, 20 September 2011 03:28 AM

  நிச்சயமாக நான் யாருக்கும் ஆதரவு தெரிவித்து தனிபட்ட பயனை அடைவதுக்கு எழுதவில்லை. மிகவும் தூர நோக்குடன் சிந்தித்தால் மாக்கார்ர மகன் ஹலீம் தான் பொருத்தமான , சமூக நோக்குடையவராக, அன்பான, முகாமைத்துவம் உள்ளவராக இருக்கிறார். நீங்களும் அவரை பற்றி விசாரித்து பாருங்கள் ,,,

  Reply : 0       0

  Riyal A.M Wednesday, 21 September 2011 04:57 PM

  ஜெமீல் காக்கா என்ன பண்ணுறீங்க இங்க ? ?

  Reply : 0       0

  rozan Tuesday, 20 September 2011 07:09 AM

  மீரா மொஹிடீன்....நீங்க சரியாக சொன்னீங்க.......ஹலீம் UK இலும் சமூக உறவுகளோடு ஒன்றித்து இருந்திருகிறார்....

  Reply : 0       0

  சிராஜ் Tuesday, 20 September 2011 07:49 AM

  விசாரித்தேன். நிசாம் அல்லது முழக்கம் மஜீட் இவர்கள் இருவரில் ஒருவர்தான் மேயாரகனும்/

  Reply : 0       0

  ramz Sunday, 18 September 2011 07:19 PM

  ஹரிஸ் நானா என்னே சொல்றாரு?????????????

  Reply : 0       0

  kalam Sunday, 18 September 2011 09:17 PM

  ஹரிஸ் நானா இன்று எல்லாத்தையும் சொல்வார் ...............

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .