2021 மே 08, சனிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மோதல்

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்..றம்ஸான்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர் குழுக்களுக்கிடையில் இன்று திங்கட்கிழமை மாலை மருதமுனை பிரதேசத்தில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்தில் அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனயைடுத்து, கல்முனை பொலிஸார் ஸ்த்தலத்தி;ற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத்தாக்குதலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனையை சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் சகோதரரான ஏ.எம்.நஸீர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் மருதமுனையை சேர்ந்த ஏ.ஆர்.அமீர் தலைமையில் சென்ற குழுவினரே இவரை தாக்கியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.

தேர்தல் பிரசார சுவரொட்டி ஒட்டப்பட்டமை தொடர்பிலேயே இரு வேட்பாளர்களின் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • சிறாஜ் Wednesday, 28 September 2011 03:21 AM

  இது எல்லாக்கட்சிக்குள்ளும் எல்லாரும் செய்யும் வேலைதான். சண்டை என்பது போட்டிக்காக வருதுதான் அதனை சமாளித்துப்போக வேண்டியதுதான் பொறுப்புதரிகளின் கடமை.
  எனவேகுறுக்கால் இருந்து கொண்டு ஊளயிடும் நபர்களுக்கு ஒரு விடயம் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள், மற்றவர்கள்
  தானாக திருந்துவார்கள்.

  Reply : 0       0

  zamroodh Wednesday, 28 September 2011 04:32 AM

  மனிதத்தன்மையுடன் உண்மையான முஸ்லிம்களாக போட்டியிடாதவரை சண்டையும் சச்சரவும் தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது உலகளாவிய வரலாற்று உண்மையும் கூட.

  Reply : 0       0

  mca fareed Thursday, 29 September 2011 02:20 AM

  இதுதான் காங்கிரசின் புதிய தேர்தல் விஞ்ஞாபனமோ,

  Reply : 0       0

  Nafeel Tuesday, 27 September 2011 12:28 PM

  இங்கும் களனி போன்று ஆக்கப்போகிராரோ? எல்லா வேட்பாளர்களுக்கு குறைந்த பட்ச கல்வி அறிவு கட்டாயம்.

  Reply : 0       0

  sopnam Tuesday, 27 September 2011 02:30 PM

  கௌம்பிட்டாங்கய்யா... கௌம்பிட்டாங்க..

  Reply : 0       0

  hamaza Tuesday, 27 September 2011 03:44 PM

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

  Reply : 0       0

  Riyal A.M Tuesday, 27 September 2011 04:15 PM

  இதுவொன்றும் புதிதல்லவே ...! ! !

  Reply : 0       0

  Ullam Tuesday, 27 September 2011 04:53 PM

  மேலும் எதிர்பாருங்கோ....

  Reply : 0       0

  meenavan Tuesday, 27 September 2011 05:12 PM

  விருப்பு வாக்கு சண்டையோ? உட் பூசலின் பிரதிபலிப்போ? ஊருக்குள் சண்டை பிடிப்பவர்கள் மாநகர அங்கத்தவரானால் நிலைமை என்னாகுமோ?

  Reply : 0       0

  uoorann Tuesday, 27 September 2011 05:39 PM

  முஸ்லிம் காங்கிரஸ் எப்படியும் வெல்லும் என்ற நினைப்பில் தான் இந்த போட்டி எல்லாம். இறைவன் நாடியவர்களுக்கு தான் அதிகாரத்தை கொடுப்பான்.

  Reply : 0       0

  Asry Tuesday, 27 September 2011 08:38 PM

  ஏன் இந்த சண்டை?

  Reply : 0       0

  தம்பி Tuesday, 27 September 2011 09:25 PM

  இந்த வேட்பாளர்தான் சில மாதங்களுக்கு முன்னர் மருதமுனையைச் சேர்ந்த பத்திரிகையாளரைத் தாக்கினார். இது குறித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தியது.

  இந்த காடைத்தன நபருக்கு கல்முனை தேர்தலில் போட்டியிட மு.கா. தலைவர் ஹக்கீம் சந்தர்ப்பம் வழங்கியமையானது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

  காசுள்ளவர்களையும், காடையர்களையும் வைத்து அரசியல் செய்யும் ஒரு கலாசாரத்தை ஹக்கீம் உருவாக்கி வருகின்றார்.

  அமீர் போன்றோர் நமக்கு வேண்டாம்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 27 September 2011 09:48 PM

  இறைவன் நாடியவர்களுக்கு அதிகாரத்தைக்கொடுக்கிறான் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது அல்ல. வாக்களிக்கிறவர்கள் இறைவனை மறந்தவர்களும் அல்லர்கள் வாக்களிக்காதவர்களும் கூறலாம்: இறைவன் நாடியவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கின்றான் நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று?
  இந்த வசனம் சர்வாதிகாரிகளும் அடிக்கடி குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டும் வசனம். முழு அத்தியாயத்தையும் அந்த வசனத்தோடு கூடிய மற்ற விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் பொருள் சொல்ல முனைவது நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும்.

  Reply : 0       0

  aslam Tuesday, 27 September 2011 11:13 PM

  இது ஒன்றும் புதிது அல்ல. எங்களுக்கு எல்லாம் பழகி போச்சு. என்ன செய்ய முடியும் எல்லா வேட்பாளர்களும் அப்படி தான் இருக்கிறார்கள்?

  Reply : 0       0

  aslam Tuesday, 27 September 2011 11:20 PM

  ஏன் இந்த சண்டை கட்சிகுலேய சண்டை பிடிச்சா மத்த கட்சிகள் எப்படி நம்முடன் ஒத்துமைய இருக்கும்?

  Reply : 0       0

  துறை Wednesday, 28 September 2011 01:22 AM

  சகோதரர் தம்பி அவர்களே! கல்முனை மாநகர சபை தேர்தலில் மருதமுனை பிரதேசத்தில் சட்டத்தரணி றகீபை விடவும் அமீரே அதிகூடிய வாக்குளை எடுப்பார். தற்போது றகீபின் மேயர் கனவு பறந்துள்ளது. போர போக்கில் அமீர் பிரதி மேயராகவும் முடியும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X