2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'பிரதேசவாதம், கட்சி பேதங்களுள்ள ஒருவராக என்னை அடையாளம் காணக்கூடாது'

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை மக்கள் அனைவரும் என்னை ஒருமுகமாகவே பார்க்க வேண்டும், பிரதேசவாதம், கட்சி பேதங்களுள்ள ஒரு தவிசாளராக என்னை மக்கள் அடையாளம் காணக்கூடாது. அவ்வாறானதொரு நிலைமை உருவாகி விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கின்றேன். எனவே, இவ்விடயத்தில் பிரதேச சபையிலுள்ள உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை பிரதேசசபைக் காரியாலயக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, பிரதேச சபையால் வீதி விளக்குகள் பொருத்தப்படுகையில் பாலமுனைப் பிரதேசத்திலுள்ள எதிர்க்கட்சிக்காரர்களுடைய வீடுகளின் முன்னாலுள்ள சில வீதி விளக்குகள் பொருத்தப் படாமல் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 'இவ்வாறு செய்வது சரியல்ல. வீதிக்கு வெளிச்சம் கொடுப்பதில் கட்சி பாகுபாடுகள் பார்க்கக் கூடாது என  பிரதேசசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எல்.எம். பரீட் இதன்போது கூறினார்.

இந்தக் கூற்றுக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே தவிசாளர் நசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் போது கட்சி பேதங்கள் பார்க்கக் கூடாது. தேர்தலில் நாம் போட்டியிட்டபோது கட்சி பேதங்கள் நம்மிடையே இருந்தன. ஆனால், தற்போது நாம் மக்களுக்கு பொதுவானவர்கள். வெளிச்சம் கொடுப்பதில் கட்சி பேதங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது நேர்மையான செயலல்ல. இதுக்குறித்து நான் ஆராய்வேன்.

நெல்சிப் திட்டத்தின் கீழ் இவ்வருடம் அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக பாலமுனையின் அபிவிருத்திக்காக நாம் சமர்ப்பித்த திட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமையால் இவ்வருடம் பாலமுனைக்கு நெல்சிப் திட்டத்தின்கீழ் நிதியுதவி கிடைக்கவில்லை.

எவ்வாறிருப்பினும், அடுத்த வருடம் நெல்சிப் திட்டத்தின் கீழான நிதியொதுக்கீட்டில் பாலமுனைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

இக் கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேசசபை உப தவிசாளர் எம்.ஏ. அன்சில், உறுப்பினர்களான ஐ.எல். மனாப், எஸ்.எல். முனாஸ், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசீர் ஐமன், ஏ.எல். சுபைதீன், ரி. ஆப்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

                                                                                                                                                                                                                                                                                                     


  Comments - 0

 • ibnuaboo Saturday, 01 October 2011 05:16 PM

  உண்மையாகவே இவ்வாறான மக்களட்சி ன்றங்களில் இருந்து பேசுவதுதான் மரபு . அக்கால கம் சபாக்களில் ஆட்சி அதிகாரிகள் இருந்துதான் பேசுவார்கள். ஆனால் இருந்துதான் டீபேசவேண்டுமென்பதற்கு நாடாளுமன்றம் உதாரணமல்ல. ஏனெனில் இச்சபை நாடாளுமன்றமுமல்ல. அவர் சபநாயயகருமல்ல. அரசியல் மேடைகளில் நின்று பேசிய பழக்க தோஷம்.

  Reply : 0       0

  சரோ Tuesday, 04 October 2011 07:14 AM

  அது சரி உங்கட பொதுச்சந்தை பிரச்சனை என்னாச்சு? உங்கட ஊரில் இருக்கும் அமைச்சருக்கும் கொஞ்சம் அப்படித்தானா?

  Reply : 0       0

  நண்பன் Saturday, 01 October 2011 09:14 PM

  என்ன இது சிறந்த பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள்
  அது சொல்லவில்லையே? ஆனால், இங்கு இருக்கும் முனாஸ் மேடைப்பேச்சு உன்மையாகவே அவரை மக்கள் தெரிவு செய்தது அவரின் அழகான ஆழுமையுள்ள அடக்கமான அனைவரையும் அரவனைக்கும் அன்பான பேச்சில்தான் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  Reply : 0       0

  SIRAJ Sunday, 02 October 2011 05:59 AM

  ஆமா நண்பன் அதுதான் சொல்லவேண்டிய விடயம் முனாஸ் என்பவரை ஊருக்கே தெரியாது. வெளிநாட்டில் இருந்தவர் இம்முறை பிரதேசசபையில் இறங்கிய உடனேயே உறுப்பினராகினார் என்றால் அது அவரின் அழகான மக்களை அரவணைக்கும் ஆழமான அவரது பேச்சு, அத்துடன் மக்களை அதாவது வறுமையில் உள்ள மக்களை ஆதரிக்கும் நல்ல பண்பு.. வாழ்த்துக்கள் முனாஸ் மற்றும் அனைவருக்கும்.

  Reply : 0       0

  sri Friday, 30 September 2011 01:27 AM

  பானைக்குள் தான் எல்லாம் ......... ஹஹாஹ்

  Reply : 0       0

  poraali Friday, 30 September 2011 02:26 AM

  இவங்க இருந்து கொண்டே பேசலாமே/////???

  Reply : 0       0

  சிறாஜ் Friday, 30 September 2011 05:29 AM

  இது சபை என்றால் தவிசாளர் எழும்பத் தேவை இல்லை. பாராளுமன்றத்தில் சபாநாயகர் எழும்புவதில்லை.
  இங்கு நல்ல சேவை நடக்கனும் என்று பிரார்த்திப்போம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X