2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சாய்ந்தமருதில் சுகாதாரப் பரிசோதனை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள சுகாதார வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் சுகாதார பரிசோதனை நிகழ்வொன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்தது.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இரத்த அழுத்தம், போசாக்கு நிலைமை, நீரிழிவு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன், அவர்களுக்கு சுகாதாரம் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

எதிர்வரும் தினங்களில் வெவ்வேறு குழுக்களுக்கு மேற்படி வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.


  Comments - 0

 • Sanoon Mohideen Monday, 03 October 2011 07:32 PM

  சாதாரண மக்களுக்கும் இச்சேவை விரிபுபடுத்தப் பட்டால் மட்டுமே பயனுறுதியானதாய் இருக்கும்.

  Reply : 0       0

  razeek kalmunai Monday, 03 October 2011 08:03 PM

  மிக சரியாக சொன்னீர்கள் சனூன். சாதாரண மக்களுக் இக்கும் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

  Reply : 0       0

  Doc - KSA Monday, 03 October 2011 09:06 PM

  I suggest, at least once in a month, all doctors should provide such services in their respective area for free.

  Reply : 0       0

  pasha Monday, 03 October 2011 09:26 PM

  Doc-KSA, If you ask them to do free service they will call for a strike.

  Reply : 0       0

  Riyal A.M Monday, 03 October 2011 11:01 PM

  ஆமாம் அப்படித்தான் ... முதல்ல கிராம நிலதாரிகளுக்குதான் சேவை சேர வேண்டும் ..

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--