S.Renuka / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் த்ரிஷா குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யுடன் அவர் திருமண நிகழ்வுக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
த்ரிஷா புதிய படங்களுக்கு கமிட் ஆகாமல் இருப்பதாகவும், இதனால் திரையுலகில் இருந்து விலக உள்ளாரா? என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. இதனிடையே நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில், த்ரிஷா இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், "நடிகை த்ரிஷா பற்றி வெளியாகியிருக்கும் செய்தி உண்மைதான். சமீபத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட எனக்கு அதை உறுதிப்படுத்தினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக மவுனம் கலைத்துள்ள திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதற்கு பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேன். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேன். ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேன். அவர்களுக்கு நேற்றுதான் இரண்டு வயதானது. இன்னும் வேறு ஏதாவது நான் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய கற்பனை கதைக்கான கோட்டாவை பூர்த்தி செய்து விட்டோமா?" என்று கிண்டலாக அதே நேரத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் சினிமாவிலிருந்து த்ரிஷா விலகுவதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த பதிவு த்ரிஷாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago