Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் - அப்பிரதேசத்திலுள்ள காணித் துண்டுகளை சட்டத்துக்கு விரோதமான வகையில் பெற்றுக் கொண்டதாக பொதுமகன் ஒருவரினால் ஜனாதிபதிக்கு முறையீடு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காணி ஆணையாளருக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் உத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மெத பெம்முல்ல - ஜனாதிபதி செயலகத்தினூடாக காணி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி காணித்துண்டுகள் - காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் (Land Development Ordinance) உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட காணிகளாகும்.
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணித் துண்டொன்றினை சட்ட ரீதியாக விற்பனை செய்ய முடியாது என்பதும், காணியின் உரிமையாளர் குறித்த காணியினை தனது ரத்த உறவினர்களுக்கு மட்டுமே அன்பளிப்பாக வழங்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
1 hours ago
2 hours ago
ms Thursday, 06 October 2011 06:29 PM
அது சரி... நாம ஏதாவது official விஷயமா போன சட்டம் ஒழுங்கு பேசுவாங்க... இவங்க எவ்வளவு வேணுமானாலும் தனக்கு பட்டா போட்டு கொள்ளுவார்கள்... ?
Reply : 0 0
siraj Thursday, 06 October 2011 10:50 PM
இதுதான் சரியான பிடி. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சிலர் அவர்களின் வாப்பா,தம்பி, தங்கை, மச்சான் மாமனார் பெயரில் எல்லாம் எல்.ஆர்.சி காணிகளை எல்லாம் களவில் எழுதி வைத்துள்ளனர். இதுக்கு என்ன செய்வது? உடனே நடவடிக்கை எடுக்கனும். குற்ற வாழிகளை பதிவி விலக்கனும். உடனடி நடவடிக்கை எடுங்க சார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago