2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஹரீஸ் அச்சுறுத்தினார் : பாயிஸ் புகார்; பாயிஸ் அச்சுறுத்தினார் : ஹரீஸ் எம்.பி. புகார்

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.ரம்ஸான், எம்.எம்.ஜெஸ்மின் )

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை பிரதேசத்தில் வைத்து அக்கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளரும் அதியுயர் பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸை அச்சுறுத்தியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் தன்னை அச்சுறுத்தியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் பொலிஸில் முறைப்பாடுசெய்துள்ளார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பளார்களுக்கு தேர்தல் நடவடிக்கையின் போது சட்ட உதவி வழங்குவதற்காக கட்சி தலைமைத்துவத்தின் அனுமதியுடன் வருகை தந்த சட்டத்தரணி பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனைக்குடி அல் - சுகரா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து அச்சுறுதியதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்த நீர் ஏன் கல்முனை பிரதேசத்திற்கு வந்தாய்? என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்த போது அவரின் பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தகஸ்தர்கள் ஏசியதாகவும் குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸிற்கு எதிரான முறைப்பாட்டை சட்டத்தரணி .பாயிஸ் தாக்கல் செய்யும் போதும் உடன் சென்றிருந்தனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை சட்டத்தரணி பாயிஸ் அச்சுறுத்தியதாகவும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

'நான் கல்முனைக்குடி அல் - சுஹரா வித்தியாலயத்திற்கு மாலை 3.30 மணியளவில் வாக்களிக்க சென்ற போது, முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரான பாயிஸ் என்னை அச்சுறுத்தினார். நான் வாக்களிப்பதையும் அவர் தடுக்க முயற்சித்தார்.

அதனை மீறி நான் வாக்களித்து விட்டு வந்த பின்னர், மீண்டும் தன்னை அவர் அச்சுறுத்தினார். இதன் போது, சட்டத்தரணி பாயிஸுடன் கொழும்பிருந்து வந்த சிலர், நான் கொழும்பு வர முடியாது எனவும் அச்சுறுத்தினர்.

மன்னாரிலிருந்து கல்முனை வந்து தேர்தலை குழப்ப வேண்டாம் என இதன்போது நான் தெரிவித்தேன். இதேநேரம், எனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்னை அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை தேர்தல் நடவடிக்கைக்கான குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • nawzhad Sunday, 09 October 2011 06:24 PM

  evlvoo saithaalum velai illai.

  Reply : 0       0

  Doc - KSA Sunday, 09 October 2011 07:08 PM

  What would be party leader's response on this incident? Let us wait and observe.

  Reply : 0       0

  Rishadh Aboothalib M Monday, 10 October 2011 02:47 AM

  shame on these MPs and their party :sad: :sad:

  Reply : 0       0

  siraj Monday, 10 October 2011 02:53 AM

  முஹமட் என்னும் பெயரில் கொமண்ட் பண்ணியிருப்பவர் காவாலிபோல் பேசாது மனிதனாகப் பேசனும் வார்த்தையில் அழகு இருக்கனும் முதல்ல படி. பின்பு படிப்பி.

  Reply : 0       0

  arasi Sunday, 09 October 2011 01:36 AM

  உங்களின் நாற்றம் கல்முனைக்குள் மட்டும் இருக்கட்டும்.

  Reply : 0       0

  samsudeen Sunday, 09 October 2011 02:23 AM

  ஒண்ணுமே புரியல்லே.. உலகத்திலே என்னமோ நடக்குது ஏதுமோ நடக்குது . வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

  Reply : 0       0

  Naleem Sunday, 09 October 2011 02:47 AM

  சட்ட உதவி வழங்கச் சென்றவரே சட்டத்திற்கு முரனாக செயற்படலாமா?

  Reply : 0       0

  samsudeen Sunday, 09 October 2011 03:50 AM

  நளீம் தம்பி கல்முனைக்கு கடவுள் வந்தாலும் இதுதான் கதி, இது வரலாறு. நீங்கள் எல்லாம் செய்த வரலாற்று துரோகம் விடிய தெரிய வரும். தூக்கம் வரும்... படுத்து எழும்புங்க.

  Reply : 0       0

  meenavan Sunday, 09 October 2011 04:14 AM

  மன்னாரில் இருந்து வந்து ஹரிசை,பாயிஸ் அச்சுறுத்தினார? அதுவும் ஹரிசின் கோட்டையான கல்முனையில் நம்ப முடியவில்லை? ஹரிசின் இயலாமையின் மற்றுமொரு சான்று.

  Reply : 0       0

  makkal 1st Sunday, 09 October 2011 04:36 AM

  ஊத்தை வேலைதானே இது ...

  Reply : 0       0

  siraj Sunday, 09 October 2011 05:09 AM

  நான் ஒரு முட்டாளுங்க. நல்லா படிச்ச நம்முட சுலைமான் காக்கா சொன்னாங்க. நான் ஒரு முட்டாளுங்க.
  ஏன் சொன்னார் எதுக்கு சொன்னார் என்று அறியனும் அப்படித்தானே? அதுதான் இங்கும் நடந்திருக்கு புரிந்திட்டால் சரி.

  Reply : 0       0

  meenavan Sunday, 09 October 2011 02:19 PM

  தம்பி ஹரிஸ் உங்கள் காய் நகர்த்தல் வெற்றி அளித்துள்ளது? எப்போது சுகாதார பிரதி அமைச்சர் ஆவீர்கள்?

  Reply : 0       0

  கல்முனை சீதேவி Sunday, 09 October 2011 02:51 PM

  என்னடா மக்காள் நான் வந்தா கல்லெறியிறியள்
  உங்கட ஆக்கள் வந்தா சொல்லெறியிறியள்...

  முதல்ல உங்க ஊர்ல இருக்கிற ஊத்தைய அழிச்சிட்டு பாருங்க உங்க ஊரு எங்கேயே போகும்.... மடார் தடார்.. யாருடா இது இன்டநெட்டுலயும் எனக்கு கல் எறியிறது.... ஹி ஹி... எப்பிடியிருந்த ஊரு எப்பிடியாயி்ட்டு... எல்லாம் என்ட பதுவாதான்.

  Reply : 0       0

  Maruthoor A.R.M Sunday, 09 October 2011 04:18 PM

  வேறொரு பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு வந்தவர்கள் எம்மவரை விரட்டுவதா ?? இது நம்பமுடியாதுள்ளது .. அப்படி உண்மைலையே அவர்கள் விரட்டி இருந்தால் இன்று பத்திரிகைகளில் வரும் செய்தி கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்...

  Reply : 0       0

  mohamed Sunday, 09 October 2011 04:49 PM

  சோனக அரசியல் போகும் பாதை தான் இது. SLMC பிழைப்புவாதிகளின் கூடாரம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--