Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்று முடிந்த கல்முனை மாநகரசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரத்திற்கான மேயராக நியமிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற பதவியினை துறப்பதாக சில விஷமிகளால் பரப்பப்பட்ட செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகரசபைக்கான மேயரை நியமிப்பதற்கான கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
அதிவுயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப்பையா அல்லது இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி நிஸாம் காரியப்பரையா கல்முனை மாநகரசபை மேயராக நியமிப்பதென்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
எந்தவித தீர்மானமும் எடுக்க முடியாத நிலையில் கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி மற்றும் பிரதியமைச்சரும் கட்சியின் தவிசாளருமான சேகு பஸீர் தாவுத் ஆகிய மூவர் அடங்கிய குழுவே இறுதித்தீர்மானத்தை எடுக்கும் என்ற முடிவுக்கு வந்தது.
இதற்கிடையில் சாய்ந்தமருது பிரதேச மக்கள் மத்தியில் எனக்குள்ள செல்வாக்கை இல்லாமல் செய்யும் முயற்சியில் செயற்படும் சிலர் பரப்பிய செய்தியினால் மக்கள் குழப்பமடையத் தேவையில்லையெனவும் இச்செய்திக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள் அமைதியாக இருந்து தமது நாளாந்த நடவடிக்கைகளை தொடருமாறும் கோருகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
6 hours ago
9 hours ago
19 Sep 2025
19 Sep 2025
anusan Wednesday, 12 October 2011 06:54 PM
if the mayor post not granted by slmc head to mr. shiraz, that equal to mr. nizam keeping another person's wife. what a shame nizam. please reject the mayor post and accept deputy mayor.
Reply : 0 0
maazeen Wednesday, 12 October 2011 07:10 PM
நீங்கள் தேர்தலுக்கு முதல் சொல்லி இருந்தால் நமபலாம்.
Reply : 0 0
Thambi Wednesday, 12 October 2011 09:39 PM
தனது பதவியை இழக்க நேரிடும் என்று பயந்துவிட்டார் , ஹ ஹ ஹ ......... சரவணா
Reply : 0 0
kuru Thursday, 13 October 2011 07:36 PM
நெருப்பு இல்லாமல் புகை வராது. இதுதான் உண்மை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
19 Sep 2025
19 Sep 2025