2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மறைந்த ஊடகவியலாளர்கள் தர்மலிங்கம், அலிகான் ஆகியோருக்கு இரங்கல்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எம்.சி.அன்சார்)
மறைந்த ஊடகவியலாளர்களான கே.என்.தர்மலிங்கம், ஏ.எம்.அலிக்கான் ஆகியோருக்கான இரங்கற் கூட்ட நிகழ்வு நேற்று சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதன் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்.ஹாபிஸ் என்.எம். அப்துல்லா, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன்,  தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், விசேட அதிதிகளாக வீரகேசரி பத்திரிகையின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.சிவராஜா, வீரகேசரி பத்திரிகையின் விற்பனை மேம்பாட்டு முகாமையாளர் செந்தில்நாதன், தினக்குரல் பத்திரிகையின்  ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த எம்.ஏ.எம். நிலாம் உட்பட ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைத்துறை சார்ந்தோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--