2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

டிரான்ஸ்பேரன்சி இன்டநெஷனலின் மக்கள் மேடை நிகழ்வு

Super User   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஊழல்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் டிரான்ஸ்பேரன்ஸி  இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு  செய்துள்ள 'மக்களுக்கு கைகொடுத்தல' எனும் தொனிப்பொருளிலான கண்காட்சியும் 'மக்கள் மேடை' எனும் தலைப்பிலான திறந்த கலந்துரையாடலும் கல்முனையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்களுக்குக் கைகொடுத்தல் கண்காட்சியும் மக்கள் மேடை நிகழ்விலும் பல்வேறு  அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன.

இவற்றுள் அரச நிறுவனங்களான குடிவரவு குடியகல்வு திணைக்களம், தேசிய ஆட்பதிவு திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்; மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பனவற்றுடன் பல்வேறு நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த தினம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள மக்கள் மேடை நிகழ்வில் மக்கள் தமது நாளாந்த தேவைகளை நிவர்த்திக்கும் பொருட்டு சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அரச அதிகாரிகளுடன்  திறந்த கலந்துரையாடலில் பங்குபற்ற முடியும் என டிரான்ஸ்பேரன்சி இன்டநெஷனல் அறிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாகா இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு திணைக்களம், இரத்தவங்கி மற்றும் நோர்வே அகதிகளுக்கான மன்றம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X