Kogilavani / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நடவடிக்கையின் இறுதிக்கட்ட கணக்கெடுப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு இப்பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனைப் பிரதேச செயலகத்திலும் இப்பயிற்சிநெறி நடைபெற்றது.
புள்ளிவிபர ஆய்வு உத்தியோகத்தர் எம்.எப்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை பிரதேச செயலக நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.லாகிர், உட்பட மேற்பார்வை உத்தியோகத்தர்களாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் பிரதேச செயலாளரினால் கையளிக்கப்பட்டன.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .