Kogilavani / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை அஷ்ரப் நகரில் அமைந்துள்ள திண்மக் கழிவு சேகரிப்பு நிலையத்தின் பராமரிப்புக் குறித்தும் பிரதேசத்தின் சுகாதாரம் தொடர்பிலுமான கலந்துரையாடலொன்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பிரதேசசபையின் உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திண்மக் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர் ஏ. காமினி, அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஷாஹிர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் கே.ஜே.எம். சதாத், திண்மக் கழிவு முகாமைத்துவ கண்காணிப்பாளர் எம்.எச்.எம். றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திண்மக் கழிவு சேகரிப்பின் போது கழிவுகளை வகைப்படுத்திச் சேகரிக்கும் செயற்பாடொன்றை நடைமுறைப்படுத்துவது, அது தொடர்பில் பிரதேச மக்களை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட சில தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
இதேவேளை, அஷ்ரப் நகரில் அமைக்கப்பட்டுள்ள திண்மக் கழிவு சேகரிப்பு நிலையத்தினை உறுப்பினர் முனாஸ் மற்றும் யுனெப்ஸ் நிறுவன திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டப் பணிப்பாளர் சிலியா மாகஸ் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
41 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
SIRAJ Friday, 21 October 2011 08:51 PM
ஊரின் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள் நன்றி....
Reply : 0 0
அஹ்மட் Saturday, 22 October 2011 07:22 PM
சிறப்புற வாழ்த்துகிறோம். இந்த தலைமைத்துவத்துடனான அரசியல் புதிய அரசியல்வாதியான உங்களுக்கு நல்லது எதுவோ அதன் பக்கம் சார்ந்து சேவையாற்ற வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago