Kogilavani / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டை வர்த்தக நிலையத்தில் வைத்து விற்பனை செய்த ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்ததுடன் பதுக்கிவைக்கப்பட்ட சிகரட்டுகளையும்; கைப்பற்றியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அட்டாளைச்சேனை, கோணாவத்தை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து மேற்படி நபரை கைது செய்ததுடன் இவரிடமிருந்து 4 பண்டல் சிகரட்டுக்களையும் மீட்டுள்ளனர்.
மேற்படி நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
22 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
28 minute ago
35 minute ago