2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

யானைக்கு வழிவிட்ட பஸ் சரிந்தது

Editorial   / 2026 ஜனவரி 15 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து புதன்கிழமை (14) இரவு 11.30 மணியளவில் திம்புலாகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும், ஓட்டுநர் சிறு காயங்களுடன் மனம்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனம்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனம்பிடிய பொலிஸார், வீதியைக் கடக்கும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை வீதியை விட்டு நகர்த்த வேண்டியிருந்ததாக சாரதியும் நடத்துனரும் பொலிஸாரிடம் தெரிவித்ததாகத் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனம்பிடிய பொலிஸார், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சாரதியும் நடத்துனரும் உட்பட மேலும் மூன்று பயணிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X