2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மின்கம்பியில் சிக்கி தந்தை பலி: மகன் படுகாயம்

Editorial   / 2026 ஜனவரி 15 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை வெலிகம, கம்மல்கொட பகுதியில் தந்தை, மகன் மீது மின்சாரம் தாக்கியதில் 66 வயதான தந்தை உயிரிழந்துள்ளார். 22 வயதான மகன்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை தனது மகனுடன் புதன்கிழமை (14) இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X