Editorial / 2026 ஜனவரி 15 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
யாழ்ப்பாணம், கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகை கைப்பற்றிய கடற்படையினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தைச் சேர்ந்த கச்சத்தீவில் உள்ள கடற்படைப் பிரிவினால், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணிக்கும் டிங்கி படகை அவதானித்தது, வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பல் நடத்திய இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த டிங்கி படகின் ஊடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பறவைகளே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago