2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் 32 அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  2011ஆம் ஆண்டிற்கான தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்ட நிதியிலிருந்து 22 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதன்படி, அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஓர் வேலைத்திட்டத்திற்கு 250,000 ரூபாவும், சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன ஏழு வேலைத்திட்டங்களுக்கு 190,000 ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி ஐந்து வேலைத் திட்டங்களுக்கு 700,000 ரூபாவும்,  எச்.எம்.எம்.ஹரீஸ் நான்கு வேலைத்திட்டங்களுக்கு 200,000 ரூபாவும், எம்.ஏ.சுமந்திரன் ஐந்து வேலைத் திட்டங்களுக்கு 500,000 ரூபாவும், பீ.எச். பியசேன நான்கு வேலைத்திட்டங்களுக்கு 115,000 ரூபாவும், டியூ குணசேகர ஓர் வேலைத்திட்டத்திற்கு 100,000 ரூபாவும், அனுர குமார திஸாநாயக்கா ஓர் வேலைத் திட்டத்திற்கு 50,000 ரூபாவும், சரத் வீரசேகர ஓர் வேலைத் திட்டத்திற்கு 50,000 ரூபாவும், சிறியாணி விஜேவிக்கிரம மூன்று வேலைத் திட்டங்களுக்கு 75,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சரத் வீரசேகர மற்றும் சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோர் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • razeek kalmunai Thursday, 17 November 2011 12:51 AM

    பைசால் காசீம் எம்.பி.யிடம் நிதி இல்லையோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .