2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அம்பலாங்கொடை கொலைக்குப் பின்னணியில் இருந்த பெண்

Freelancer   / 2025 டிசெம்பர் 26 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை பிரதேசத்தில் டிசம்பர் 22 ஆம் திகதி காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய விசாரணைகளில் இருந்தே பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, வெளிநாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என்பவர் இந்தக் கொலையைத் திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை சமீபத்தில் கிரிபத்கொடையில் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தது.

இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் போக்குவரத்துக்கும், அவர்கள் தப்பிச் செல்வதற்கும் உதவியுள்ளனர்.

பின்னர், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு விசாரணையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, உளவு பார்க்கப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கண்டுபிடித்தனர், மேலும் துப்பாக்கியை வழங்கிய பெண் பற்றிய தகவல்களும் தெரியவந்தது.

அதன்படி, ஹிக்கடுவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார், விசாரணையின் போது, ​​கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைத்துப்பாக்கி மற்றும் ரிவால்வரும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது அந்தப் பெண் கரந்தெனிய சுத்தாவுடன் நேரடி தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தெொடர்பில் பொலிஸார் மேலதிக விசாணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X