Freelancer / 2025 டிசெம்பர் 26 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதை தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த சட்டமூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தச் செயல்முறைகள் முடிவடைந்தவுடன், 2026 ஜனவரியில் பொதுமக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் 'நிறமூட்டும் அழகுசாதனப் பொருட்கள்' (Fairness Products) மற்றும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் பொருட்கள் எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பது குறித்து இப்போதே கூறுவது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார். R
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago