2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மர கன்றுகள் நடும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2011 நவம்பர் 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
'வழமான நாடு, வழமான தேசம்' திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில பயன்தரும் ஆயிரம் மரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை மலையடிகிராமம் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்கத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், நம்பிக்கையாளர் சபை, ஊர்மக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், உதவி தவிசாளர் எம்.ஐ.கலிலூர்றஹ்மான்,  மாவட்ட வனவிலங்கு அதிகாரி லலித்கமகே, வட்டார வனவிலங்கு அதிகாரி எம்.ஏ.ஜயா, பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.காதர், எம்.ரீ.கரீம்,  தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X