2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன நல்லுறவு மேம்பாட்டு ஒன்று கூடல் நிகழ்வு

Kogilavani   / 2011 நவம்பர் 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கும் சிரேஸ்ட மாணவர்களுக்குமான இன நல்லுறவு மேம்பாட்டு ஒன்று கூடல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

உலக வங்கியின் ர்நுவுஊ திட்டத்தின் அனுசரணையுடன் ர்நுவுஊ திட்ட பணிப்பாளர் கே.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது மூவின மாணவர்களுக்கிடையிலான இனநல்லுறவையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்றது.

இதன்போது மூவின கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  கலாசார ரீதியிலான உணவுகளும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் இணைப்பாளர்களான எம்.ஏ.எம்.சமீம், பி.இளங்கோ, சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஏ.எப்.எம். அஸ்ரப், மாணவர் நலன்புரி சேவை பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸ்தபா, விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவகள் பலரும் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .