2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்,ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமுர்த்தி உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் அம்பாறை பொதுமைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கி வலைய அலுவலகங்களினூடாக சமுர்த்தி முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி மாவட்ட உதவி ஆணையாளர் கே.டபிள்யூ.கிருந்தக்கே தலைமையில் நடைபெறுகின்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிரியாணி விஜயவிக்ரமவும் அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அசங்கே அபேயவர்த்தண, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பீ.குனரத்ண, இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் வங்கிப்பிரிவு பணிப்பாளர் ஏ.கே.எல்.சந்திரத்திலக, உணவு போஷாக்கு அமைச்சின் இணைப்புச் செயலாளர் சுனில் சந்திரலால், சமுர்த்தி மாவட்ட இணைப்பாளர் ஐ.அலியார், அரச அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X