Freelancer / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது உலகளவில் பெரும் புள்ளியாக மாறிவிட்டார்.
விஜய் தனது சினிமா வரலாற்றில் கடைசி அத்தியாயத்தில் இருக்கின்றார். தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படமே இவருடைய கடைசி படமாகும்.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், கோலாலம்பூரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 9.15 மணி அளவில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் விஜயை பார்ப்பதற்காக ரசிகர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் குவிந்திருந்தனர்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜயை பார்ப்பதற்காக தாக ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இப்படி இருக்கும்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, அவரது காருக்குச் செல்லும்போது, நெரிசலால் நிலை தடுமாறி கீழே விழுந்தார் தளபதி விஜய்.
அவர் கீழே விழுந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனே அவரைத் தூக்கிய பாதுகாப்பு அதிகாரிகள், அவரை காருக்குள் அனுப்பி வைத்தனர். இப்படி இருக்கும்போது விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியே வந்த சில நிமிடங்களில் விஜயின் கார் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
அதாவது, விஜய் சென்ற காரில் விஜயுடன் அவரது பாதுகாவலர், ஓட்டுநர் உள்ளிட்டோர் இருந்தார்கள். இப்படி இருக்கும்போது, விமான நிலையத்தில் இருந்த கூட்டத்தை கடந்து வெளியே வந்தபோது, ரிவேர்ஸில் வந்து கொண்டு இருந்த கார், விஜய் வந்த காரின் மீது லேசாக உரசியது.
இதனால் விஜய் காரின் இண்டிகேட்டர் பகுதி, உடைந்து சேதமானது என்று கூறப்படுகிறது. சிறிய வகை விபத்து என்பதால், விஜய், அவரது பாதுகாவலர், டிரைவர் உள்ளிட்டோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. R
7 minute ago
17 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
57 minute ago