Menaka Mookandi / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் இரும்பினால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் நிந்தவூர் 14ஆம் பிரிவு பிரதான வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல் ஹஸன் (வயது - 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் இலங்கை வங்கிக்கு அருகிலுள்ள வீதியில் இரு நபர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட மோதலில் சென்று முடிந்தலில் இக்கொலை புரியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரினை சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைத்து பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
1 hours ago
9 hours ago
rasmin Friday, 25 November 2011 04:10 AM
தண்டிக்க பட வேண்டிய செயல் ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago