2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி பிரிவுகளுக்கு கோழிக்குஞ்சுகள் விநியோகம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி பிரிவுகள் ரீதியாக தெரிவுசெய்யப்படும் குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிக்குஞ்சுகள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சமுர்த்தி வங்கி, வலயப் பிரிவுகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட உள்ள இந்த வேலைத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூபா 400 பெறுமதியான முட்டையிடக்கூடிய ஒருமாத நாட்டுக் கோழிகள் 10 தொடக்கம் 50 வரை விநியோகிக்கப்படவுள்ளன.

இந்த கோழிக் குஞ்சுகளை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் திருகோணமலை பிராந்திய கால்நடைப் பண்ணையில் இருந்து வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .