2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தால் ஏற்பட்டுள்ள கடலரிப்புடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு?

Super User   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், எம்.சீ.அன்சார்)

ஒலுவில் துறைமுக நிர்மாணம் காரணமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றினை தாக்கல் செய்வது என அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் பிரதேச சபைக் காரியாலயக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொண்டு எதிரணி உறுப்பினர் எம்.எல்.எம். பரீட் உரையாற்றும் போது,

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான கடலரிப்பு காரணமாக துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் குறித்தும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் சுட்டிக் காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் தவிசாளர் நசீர் பேசுகையில்ளூ

'ஒலுவில் பகுதியில் ஏற்பட்டுவரும் இந்தக் கடலரிப்புக் குறித்து ஜனாதிபதி முதல் அதிகாரிகள் வரை முறையிடப்பட்டுள்ளது. ஆனால் இவ்விடயத்தில் எதுவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது கவலைக்குரிய விடயமாகும். எனவே, இந்த விவகாரத்தில் நாம் நீதிமன்றத்தை நாடுவதே ஒரே வழி' என தெரிவித்ததுடன் கடலரிப்புக்குக் காரணமானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் யோசனையொன்றினை முன்வைத்தார். இதனை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

இவ்விடயம் குறித்து உதவித் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தெரிவிக்கையில்ளூ

'ஒலுவில் துறைமுக நிர்மாணம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமானதும், அதீதமானதுமான கடலரிப்பின் காரணமாக  அப்பகுதியிலுள்ள மக்கள் விரும்பிய தொழிலைச் செய்யும் உரிமையினையும், விரும்பிய இடத்தில் வாழ்வதற்கான உரிமையினையும் இழந்துள்ளார்கள்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பு மூலம் ஒவ்வொரு பிரஜைக்கும் இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தக் கடலரிப்பின் காரணமாக குறித்த பிரதேசத்திலுள்ள மக்களின் உயிர் வாழும் உரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றார்.

இவற்றினைக் கருத்திற்கொண்டு, கடலரிப்புக்குக் காரணமானவர்களுக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அடிப்படை உரிமை மீறல் வழங்கொன்றினைத் தாக்கல் செய்வது எனவும், வழக்குக்கான செலவினை பிரதேச சபையின் நிதியிலிருந்து வழங்குவதெனவும் முன்வைக்கப்பட்ட யோசனையானது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த அமர்வில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ். ஐ.எல். மனாப், என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி, ரி.ஆப்தீன் ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதேவேளை, ஒலுவில் கடற்கரை பிரதேசத்தில் அண்மை காலமாக பாரிய கடலரிப்பு ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் மற்றும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலினை அண்டியுள்ள நில பகுதி முற்றாக அழிவுற்று போயுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கு கூட இடமில்லாது, கரை முழுவதும் கடல் அலையினால் அரித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களின் 70ற்கும் மேற்பட்ட வாடிகளும் 600ற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கடல் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் சுமார் 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில்  ஒலுவில் பிரதேசம் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் ஏற்படும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0

 • avathaani Friday, 25 November 2011 08:30 PM

  சம்பந்தப்பட்டவர்கள் எனும் போது துறைமுக அதிகாரிகளை சுட்டுமா அல்லது அரசை குறிக்குமா?

  Reply : 0       0

  ala Friday, 25 November 2011 09:04 PM

  கட்டாயம் அனைத்து தரப்பினராலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். கடல் அரிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. யாரும் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

  Reply : 0       0

  min Saturday, 26 November 2011 01:44 AM

  உடனடியான தீர்வொன்று இங்கு அவசியமாக உள்ளது சம்பந்தபாட்ட அதிகாரிகள் இந்தவிடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். எனக்கு தெரிந்தவரை சும்மார் எட்டு மாதகாலமாக இந்தகடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

  Reply : 0       0

  சாய்ந்தமருது மகன் Saturday, 26 November 2011 01:50 AM

  கண்கெட்ட பிறகு நமஸ்காரம் செய்வது என்று சொல்வது இதைத்தானா? படகு இறங்குதுறை அமைக்கும் வரையில் எங்கே போயிருந்தீங்க?

  Reply : 0       0

  எஸ்.எல்.முனாஸ் MPS Saturday, 26 November 2011 03:53 AM

  இந்த விடயம் தொடர்பாக நாங்கள் முக்கிய அதிகாரிகள் பலரிடம் கூறியிருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. மாறாக கடலரிப்பே அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அதனால்தான் சபையினால் இந்த முடிவினை எடுத்தோம். ஒரு துறைமுகமோ எதுவோ மக்களின் நலனுக்காகவே இருக்க வேண்டும். மக்களையும் மக்களின் தேவைகளையும் அழித்துத்தான் ஒரு வேலை நடக்கனும் என்றால் அப்படி ஒரு வேலை இந்த இடத்துக்கு தேவை இல்லை. எனவே சரியான முடிவு அவசரமாக வரும் வரை காத்திருக்கிறோம். மக்களுக்காக...
  நன்றி.

  Reply : 0       0

  ullooran Saturday, 26 November 2011 04:30 AM

  நல்லதொரு தீர்மானம்..! அதற்கு எமது நன்றிகள் பி. ச தவிசாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தாகட்டும். தற்போதைய காலகட்டத்தில் நாம் நீதி தேடி நீதிமன்றத்தை மாத்திரமே நாடிச்செள்ளலாம்.

  Reply : 0       0

  vaasahan Saturday, 26 November 2011 01:03 PM

  இது ஏழைகளின் வாழ்வுப் பிரச்சினை. அவசரமாக செயற்படுங்கள்.

  Reply : 0       0

  riza Saturday, 26 November 2011 03:47 PM

  kalam kadantha gnanam

  Reply : 0       0

  ummpa Saturday, 26 November 2011 04:34 PM

  இதக்கு சரியான தீர்வு இவர்களால் காணமுடியாது. உண்மையாக சிந்தித்தால் கடல் அரிப்பை நிறுத்த யாராலும் முடியாது இருந்தும் கொஞ்சம் அரிப்பின் அகோரத்தை கொஞ்சம் குறைக்க முடியும் அதக்கு பல மில்லியன் டொலர் தேவைப்படும். தொடந்து மலைகள் உடைக்கபட்டுக்கொண்டு இருப்பதனால் தராசு நம்ம பக்கம் . குர்ஆனில் என்ன சொல்லிருகிறான் 15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியானஇ (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.

  Reply : 0       0

  ram Saturday, 26 November 2011 11:20 PM

  மூளை இல்லாதவர்கள் பொது மக்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறார்கள் ஆபரை தோண்டி மக்களை சின்னா பின்னமாக்கி ஏமாற்றுகிறார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .