Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 26 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது கடற்கரை பிரதேச கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
கடல் கொந்தளிப்பாக இருந்த வேளையில் நண்பர்களுடன் சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் பாரிய அலையில் இழுத்து செல்லப்பட்டே உயிரிழந்துள்ளார்.
இவருடன் குளித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். உயிரிழந்தவர் சாய்ந்தமருது பழைய சந்தை வீதியை சேர்ந்த 27 வயதான ஆதம்பாவா முஹம்மட் சியான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சடலம் சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர், பிரதேச மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ummpa Sunday, 27 November 2011 06:38 PM
இன்னலில்லாஹி வா இன்னாஈளைகி ராஜிஊன் .
கடல், அது மகா கடல். உங்கள் விளையாட்டுக்களை குளத்தில் காட்டுங்கள் .
இது தேவையா நண்பர்களே ! நமது மீனவர்களே எவ்வளவு அனுபவம் இருந்தும் அந்த கடலின் ஆக்ரோசத்தை இன்னும் அறியாமல் தள்ளி நின்று அவர்களின் வேலை நாளாந்தம் வியர்வை சிந்துகிறார்கள். எனவே நீங்கள் முதல் நீச்சலை தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த மகா கடலுடன் உங்களின் நீச்சலை காட்டுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago