2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

எல்ல - வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் இன்று (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தங்காலை நகர சபையில் கடமையாற்றிய 41 வயதுடைய பெண் ஊழியரே உயிரிழந்துள்ளார். 

குறித்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளார்.

அதன்படி, எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .