2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில்; முதலாவது மகப்பேற்று சத்திர சிகிச்சை

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில்; முதலாவது மகப்பேற்று சத்திர சிகிச்சை இன்று வியாழக்கிழமை காலை  இடம்பெற்றது.

மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி யுரேக்கா ஸ்ரீ விக்ரமசிங்க, மகப்பேற்று பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.எம்.எம்.சபீர் ஆகியோரின் தலைமையில் இச்சத்திர சிகிச்சை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் மயக்கமருந்து நிபுணர் வைத்திய கலாநிதி ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜப் முஹம்மட், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி இப்லால் சுபைர், பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிசிரகுமார, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், மகப்பெற்று பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.முசம்மில், டாக்டர் றிசான், டாக்டர் பிரசன்ன, மேற்றன் ரீ.எல்.ஏ.றசூல் உட்பட தாதிய உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் பலரும் சத்திர சிகிச்சை கூடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

முதலாவது சத்திரசிகிச்சையின்போது ஆண் குழந்தை பெறப்பட்டது. இக்குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 'வைத்திய வலை' மூலம் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0

 • lavanas Sunday, 04 December 2011 05:27 AM

  ஆமா சாதனைதான். உங்களால முடியுமா ?

  Reply : 0       0

  pasha Friday, 02 December 2011 07:05 PM

  ஏதோ உலக சாதனை செய்தால் போல் போஸ் ...

  Reply : 0       0

  M.B.M.Nazeem Tuesday, 06 December 2011 10:58 PM

  ஆமா இது சம்மாந்துறை பொறுத்தளவில் சரிதான்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .