2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றில் விவசாய உள்ளீடுகள் வழங்கல் சந்தை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் 'ஊருக்கு மகுடம்' என்னும் திட்டத்தின் கீழ், விவசாய உள்ளீடுகள் வழங்கல் சந்தை ஆலையடிவேம்பு இத்தியடி பல்தேவைக்கட்டடித்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது இயற்கை கிரிமிநாசினிகள், மரக்கறி விதைகள், மரக்கன்றுகள் விதைநெல் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பெருமளவான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தனர்.

அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டிலும் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய பிரிவு போதனாசிரியர் ரவிசந்திரன் தர்ஷப்னி தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி.தசநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .