2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இதழியல் வரலாறு' எனும் தலைப்பில் ஆய்வரங்கு

Super User   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இதழியல் வரலாறு' எனும் தலைப்பிலான ஆய்வரங்கு அக்கரைப்பற்று ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், சட்டத்தரணியும், கவிஞருமான சேகு இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த ஆய்வரங்கில் இலங்கை முஸ்லிம்களின் இதழியல் வரலாறு, தேசிய தமிழ் நாளிதழ்களும் கிழக்கு முஸ்லிம்களது பத்திரிகைத்துறை வளர்ச்சியும், முஸ்லிம்களின் தமிழ் நாளிதழ் வரவின் தேவையும் எதிர்நோக்கும் சவால்களும், தமிழ் - முஸ்லிம் உறவில் ஊடகத்துறையின் பங்களிப்பு போன்ற தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கிலங்கையை சேர்ந்த ஏராளமான புத்திஜீவிகள், துறைசார் அறிஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் உயர் தர மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - ஒவ்வொரு வருடமும் கிழக்கு மாகாண இலக்கிய விழாவினை நடத்தி வருகின்றது.
  Comments - 0

  • Jsu Friday, 12 October 2012 05:57 AM

    ​பொருத்தமான ஒருவா் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .