2021 ஜனவரி 20, புதன்கிழமை

அக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்து கைதியொருவர் தப்பியோட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்து கைதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை தப்பியோடியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தப்பி ஓடியவர் அக்கரைப்பற்று ஆறாம் பிரிவு முஸ்லிம் மகாவித்தியாலய வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய மஹமது தம்பி இம்தியாஸ் என்பவராவார். சம்மாந்துறை - அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த நிலையில் 7 தனித்தனி வழக்குகளுக்கு நீதிமன்றங்களுக்கு ஆயராகாமல் தலைமறைவாகிவந்துள்ள நிலையில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் இவரை கைது செய்து இன்று காலை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.சரவணராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இவரை நீதிமன்ற சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டிந்த நிலையில் சம்பவதினமான இன்று மாலை 3.45 மணிக்கு சிறைக்கூடத்தில் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

 • jeseer Sunday, 11 November 2012 07:26 AM

  நீதிமன்றத்தில் இருந்து தப்பிச்சென்றால் அங்கு கடமை செய்த காவலாளிகள், வாயலில் இருந்த காவலாளிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..? எல்லாமே மாயம்தான். ஆனால் சும்மா வருபவர்களை நன்றாக விசாரணை பண்ணி சோதனை பண்ணுவார்கள். இதுபோக நீதிமன்றத்தில்உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட காவலாளிகளா? பாதுகாப்பு.... சிந்தித்து செயலாற்றுங்கள்...

  Reply : 0       0

  vasakan Monday, 12 November 2012 08:40 AM

  ivarukku sariyana thandanai valanga vendum

  Reply : 0       0

  mbas Friday, 16 November 2012 10:37 PM

  லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இருக்கும் மட்டும் எல்லா கைதிகளும் தப்பிக்கலாம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .